திருச்சி:மது போதையில் கீழே விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

திருச்சியில் போதையில் நிலைதடுமாறி கீழே விழுந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Update: 2021-09-28 08:00 GMT
திருச்சியில் மது போதையினால் கீழே விழுந்து இறந்தவர்

திருச்சி இ.பி.ரோடு, பாரதியார் தெரு, ரெங்கநாதன் தோப்பை சேர்ந்தவர் ராகவன் மகன் கனகராஜா (வயது 45). இவர் சங்கிலியாண்டபுரம் பகுதியில் உள்ள ஒரு சில்வர் பட்டறையில் வேலை பார்த்து வந்தார்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தவர், நிலைதடுமாறி கீழே விழுந்தது கிடந்தார். பின்னர் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சையில் இருந்தவர் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி செல்வி (வயது 38) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News