ஒரிசா மாநிலத்தில் இருந்து 80 டன் ஆக்சிஜன் திருச்சிக்கு வந்தது

கொரானா3வது அலையை எதிர்கொள்ள தமிழகம் தயாராக உள்ளது - அமைச்சர் கே என் நேரு பேட்டி .

Update: 2021-06-05 07:32 GMT

16 டன் தாங்கக்கூடிய லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்புகின்றனர்.  

தமிழகத்தில் ஆக்சிசன் தட்டுப்பாடு ஒரு சில மாவட்டங்களில் ஏற்பட்டிருந்த நிலையில் அவற்றை சரிசெய்ய வெளி மாநிலங்களில் இருந்து ஆக்சிசனை பெற முயற்சி செய்து வருகிறது.

ஒரிசா மாநிலத்திலிருந்து ரயில் மூலமாக 80 டன் ஆக்சிஜன் திருச்சிக்கு வந்தது. 16 டன் தாங்கக்கூடிய லாரிகள் மூலம் பல்வேறு மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

இதனை பார்வையிட்ட பின்னர் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தமிழகத்தில் தற்போது ஆக்சிஜன் பற்றாக்குறை என்பது இல்லை இருப்பினும் கையிருப்பு வைத்துக் கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ளதாகவும், மூன்றாவது அலை வந்தாலும் அதை தமிழகம் சமாளிப்பதற்கு தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நோய் தாக்கம் அதிகளவில் குறைந்து வருவதாகவும், படுக்கைகள் காலியாக உள்ள நிலையில் தொடர்ந்து கொரோனாவை தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Tags:    

Similar News