திருச்சி மாநகராட்சி சுகாதார அலுவலரை தாக்கியதாக 2 பேர் கைது
திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்தில் சுகாதார அலுவலரை தாக்கியதாக கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட 8 முதல் 13-வது வார்டு வரை உள்ள வார்டு பகுதிகளுக்கு சுகாதார அலுவலர் பணியில் இருப்பவர் டேவிட் முத்துராஜ்.
இவர் தெப்பகுளம் பகுதியிலுள்ள அலுவலகத்தில் சிறிது நேரம் ஓய்வு எடுத்து விட்டு கழிவறைக்கு செல்வதற்காக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடத்திற்கு சென்று திரும்பி வெளியே வந்தபோது மாநகராட்சி தற்காலிக துப்புரவு பணியாளராக ஏற்கனவே பணியாற்றி வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் காமாட்சி மற்றும் அவரது கணவர் காளிமுத்து ஆகிய இருவரும் அங்கு வந்து சுகாதார அலுவலர் டேவிட் முத்துராஜா காமாட்சி செருப்பால் அடுத்ததாகவும், அதை அவரது கணவர் காளிமுத்து வீடியோ எடுத்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டதாக டேவிட் முத்துராஜ் கோட்டை போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
புகாரின் பேரில் கோட்டை போலீசார் இந்திய தண்டனை சட்டம் 294(b),353,355,506(ii) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருச்சி திருவானைக்காவல் நெல்சன் ரோடு மொட்டை கோபுரம் அருகே உள்ள காளிமுத்து (வயது 32), அவரது மனைவி காமாட்சி (வயது 35) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.