திருச்சியில் 125 கிலோ குட்கா பறிமுதல்; உணவு பாதுகாப்புத்துறையினர் அதிரடி
திருச்சியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 125 கிலோ பான்மசாலா குட்கா பொருட்களை உணவு பாதுகாப்பு துறையினர் பறிமுதல் செய்தனர்.;
திருச்சி ஆண்டாள் தெருவில் உள்ள கடைகளில் கைப்பற்றப்பட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பாெருட்கள்.
திருச்சியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பாெருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ்பாபுவுக்கு புகார்கள் வந்தன. இதனையடுத்து, அவரது தலைமையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொண்ட குழு திருச்சி ஆண்டாள் தெருவில் உள்ள கடையை ஆய்வு செய்தனர். அப்போது அந்த கடையில் பான்மசாலா குட்கா போன்ற பொருட்கள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டது.
இதனைத்தாெடர்ந்து அவரது வீட்டை ஆய்வு செய்தபோது, சுமார் 125 கிலோ தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான்மசாலா குட்கா போன்ற புகையிலை பொருட்கள் கைப்பற்றபட்டு வழக்கு தொடுப்பதற்காக 6 சட்டபூர்வ உணவு மாதிரி எடுக்கப்பட்டு தமிழக அரசின் உணவு பகுப்பாய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து நியமன அலுவலர் தெரிவிக்கையில், திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தால் உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம் 2006இன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தமிழக அரசால் தடை செய்யபட்ட அல்லது கலப்பட உணவு பொருட்கள் கண்டறியபட்டால், 99449595 95,95859595 மாநில புகார் எண் 9944042322 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் ரமேஷ் பாபு தெரிவித்தார்.