முழு முடக்கத்தை மீறி மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் கூட்டம் .
கொரோனாவை மறந்த மக்கள்.;
திருச்சியில்முழு முடக்கத்தை மீறி காந்தி மார்க்கெட் பகுதியில் பொதுமக்கள் கூட்டம் .
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாததால் இன்று முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருச்சி காந்திமார்கெட் பகுதியில் பொதுமக்கள் சாதாரணமாக வெளியே சுற்றி திரிகின்றனர். முழு ஊரடங்கு என்பதை மறந்து சுற்றி திரியும் பொதுமக்களால் ஊரடங்கு என்பது போல் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. காரணமின்றி வெளியே சுற்றி திரிந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் அருண் குமார் நேற்று கூறியிருந்தார்.