சாலையில் படுத்து மறியல் போராட்டம்

எம்ஜிஆர் சிலைக்கு மனு அளித்த திருச்சி விவசாயிகள்;

Update: 2021-01-21 07:48 GMT

கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன. இந் நிலையில், உடனடியாக கணக்கெடுத்து இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், சீர்மரபினர் மக்களுக்கு ஒரே பிரிவைச் சேர்ந்த டிஎன்டி சான்றிதழ் வழங்க வலியுறுத்தியும் தேசிய - தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் திருச்சி கோர்ட் சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மனு அளிக்க விவசாயிகள் பேரணியாக சென்றனர். அப்போது திடீரென சாலையில் படுத்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறையினர் அவர்களை கைது செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News