மனித உரிமை ஆணைய சிறப்பு வழக்கறிஞராக ஜாகீர் உசேன் நியமனம்
மனித உரிமை ஆணையத்தின் திருச்சி மாவட்ட சிறப்பு வழக்கறிஞராக எம்கே ஜாகீர் உசேன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.;
மனித உரிமை ஆணையத்தின் திருச்சி மாவட்ட சிறப்பு வழக்கறிஞராக திருச்சி புத்தூர் ஆபீசர்ஸ் காலனியை சேர்ந்த எம்.கே. ஜாகீர் உசேன் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான ஆணையை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பரிந்துரையின் அடிப்படையில் தமிழக அரசின் உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கே. பிரபாகர் பிறப்பித்து உள்ளார். இவர் இந்த பதவியின் மூன்றாண்டு காலம் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.