திருச்சி கோட்டை பகுதியில் காதல் தோல்வியால் இளைஞர் தற்கொலை

திருச்சி கோட்டை பகுதியில் காதல் தோல்வியால் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2021-11-12 11:15 GMT

பைல் படம்.

திருச்சி இ.பி.ரோடு பூலோகநாதசுவாமி கோவில் தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் என்பவரின் மகன் பார்த்திபன் (வயது 22). இவர் திருச்சியில் உள்ள தனியார் எலக்ட்ரிக்கல் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இவர் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் கோட்டை போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இவர் காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டது  தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News