மோசடி வழக்கில் தலைமறைவான வாலிபர் திருச்சி விமான நிலையத்தில் கைது

மோசடி வழக்கில் தலைமறைவான ராமநாதபுரம் வாலிபர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-02-27 11:47 GMT

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஸ்கூட் விமானம் ஒன்று வந்தது. அந்த விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை இமிகிரேசன் மற்றும் உடமைகளை வான்நுண்ணறிவு சுங்க அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். இதில், இமிகிரேசன் அதிகாரிகள் சோதனையில், தேடப்பட்டு வரும் குற்றவாளி (எல்.ஓ.சி) என ஒருவரை பிடித்து ஏர்போர்ட் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் விசாரணையில், அவர் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மேல் ஆயக்குடி யாதவர் தெருவை சேர்ந்த கணேசன் மகன் வேல்முருகன் (வயது 33) என்பது தெரிய வந்தது. மேலும் இவர் மீது கடந்த 2019-ல் ராமநாதபுரம் மாவட்ட எமனேஸ்வரம் காவல் நிலைய போலீசார் மோசடி வழக்கில் கைது செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் திடீரென தலைமறைவானதும், தேடப்படும் குற்றவாளி என ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி. அனைத்து விமான நிலையங்களுக்கும் எல்.ஓ.சி. எனப்படும் நோட்டீஸ் அனுப்பியதும் தெரியவந்தது. இதையடுத்து எமனேஸ்வரம் போலீசாருக்கு ஏர்போர்ட் போலீசார் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் திருச்சி வந்த போலீசார் வேல்முருகனை கைது செய்து அழைத்து சென்றனர்.

Tags:    

Similar News