சிறுமியை மணந்து கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

திருச்சியில் சிறுமியை மணந்து கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.;

Update: 2021-10-12 05:45 GMT

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த மக்கூன்பாஷா மகன் பிலாலுதீன் (வயது 22). இவர் திருச்சி உறையூர் பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வருகிறார். இவர் நேற்று தனது நிறைமாத கர்ப்பிணி மனைவியை பிரசவத்திற்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு அழைத்து சென்றார். அங்கு அவரை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவரது மனைவிக்கு 17 வயது தான் என்று தெரியவந்தது.

 இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் நல அலகுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் கொடுத்த புகாரின் பேரில் ஸ்ரீரங்கம் போலீசார் சிறுமியை திருமணம் செய்து கர்ப்பமாக்கிய பிலாலுதீனை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Tags:    

Similar News