திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உலக தண்ணீர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.;
திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இன்று உலக தண்ணீர் தினத்தையொட்டி சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சிவராசு தலைமை தாங்கினார்.
இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் நடத்தப்பட்ட நிலத்தடி நீர் பற்றி அறிந்ததும் அறியாததும் என்ற நீரின் தரம் அறியும் முகாமை மாவட்ட ஆட்சியர் சிவராசு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் குடிநீர்வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் நாக ஆனந்த் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.