திருச்சியில் ரயில் பெட்டியில் சுமை தூக்கும் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
திருச்சியில் சுமை தூக்கும் தொழிலாளி ரயில் பெட்டியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.;
திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியை சேர்ந்தவர் ஜபருல்லாஹ் (வயது 50). இவர் திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் கடந்த சிலமாதங்களாக குடும்ப பிரச்சனை காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதற்கிடையில் திருச்சி ரயில்வே ஜங்ஷனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாலக்காடு பணிகள் ரயிலில் ஏறிய ஜபருல்லாஹ் ரயில் பெட்டிக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ரயிலை சுத்தப்படுத்துவதற்காக சென்ற தூய்மைப் பணியாளர்கள் இது குறித்து திருச்சி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலின் அடிப்படையில் ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட ஜபருல்லாஹ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் ரயில்வே ஸ்டேஷனில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.