பெண் காவலர்களுக்கு ஓட்டுனர் உரிமம்: மத்திய மண்டல ஐ.ஜி. வழங்கினார்

திருச்சி மண்டலத்தில் பயிற்சி முடித்த 51 பேர் பெண் போலீசாருக்கு ஓட்டுனர் உரிமங்களை ஐ.ஜி. பாலகிருஷ்ணன் வழங்கினார்.;

Update: 2021-10-21 10:45 GMT
பயிற்சி முடித்த ஒரு பெண் காவலருக்கு  மத்திய மண்டல போலீஸ் பாலகிருஷ்ணன் ஓட்டுனர் உரிமத்தை வழங்கினார்.

திருச்சி மத்திய மண்டல காவல்துறைக்கு உட்பட்ட9 மாவட்டங்களில் பணி புரியும் பெண் காவலர்கள் தங்கள் திறமை மற்றும் தகுதியை மேம்படுத்திக் கொள்ளவும், காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் விதமாகவும் மாவட்ட ஆயுத படை மைதானத்தில் நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது.

இதில் பயிற்சியை முடித்த 51 பெண் காவலர்களுக்கு (திருச்சி -3, கரூர் –12,பெரம்பலூர் –3, அரியலூர் –13, திருவாரூர் –15, நாகபட்டினம் –5)ஓட்டுனர் உரிமம்பெற்றுத்தரப்பட்டது. இந்த ஓட்டுநர் உரிமத்தை இன்று 21-ந்தேதி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் அனைத்து காவலர்களை நேரில் அழைத்து பாராட்டி ஓட்டுனர் உரிமத்தை வழங்கினார்.

மேலும் ஐ.ஜி. பாலகிருஷ்ணனை வாகனத்தில் அமர வைத்து ஓட்டுனர் உரிமம் பெற்ற பெண் காவலர்கள் வாகனத்தை இயக்கிக்காட்டி பாராட்டுகளை பெற்றனர்.மேலும் ஐ.ஜி. அறிவுரையின்பேரில் மத்தியமண்டலத்தில் தற்சமயம் பயிற்சியில் 53 (திருச்சி-7, புதுக்கோட்டை-10,கரூர் - 9, பெரம்பலூர்–7, அரியலூர்–8, தஞ்சாவூர்-15, நாகபட்டினம் – 2)பெண்காவலர்கள் ஓட்டுனர் பயிற்சி பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News