தேசிய சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு வரவேற்பு

தேசிய சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2021-10-25 03:30 GMT

தேசிய சிலம்ப போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள சுவர்ண பாரதி உள் விளையாட்டரங்கில் World Union Silambam Federation சார்பில் நடைபெற்ற தேசிய சிலம்பப் போட்டியில் 8 மாநிலங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இந்த போட்டியில் திருச்சி திறுவெறும்பூர் வேழம் சிலம்பம் மற்றும் தற்காப்பு கலைக்கூடம் சார்பில் பயிற்சியாளர் சந்திரசேகர் தலைமையில் 40 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

இதில் 33 தங்கப்பதக்கங்களும், 23 வெள்ளி பதக்கங்களும், 11 வெண்கலப்பதக்கங்களும் பெற்றனர். குறிப்பாக 15 வயதிற்கு மேற்பட்டோருக்கு மட்டும் நடந்த ஆண்கள் பிரிவில் "போர்வீரன்" எனும் சிறப்பு போட்டியில் திருச்சி பூலாங்குடியை சேர்ந்த முகமது பாசித் எனும் மாணவன் கலந்து கொண்டு 5 நிமிடங்களில் நான்கு ஆயுதங்களை பயன்படுத்தும் போட்டியில் வெற்றி பெற்று "போர்வீரன்" என்னும் பட்டத்தையும் ரூ.15 ஆயிரம் பரிசுத் தொகையும் வென்றுள்ளார்.

வெற்றி பெற்று பதக்கங்களை வென்று வந்த வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சி ரயில் நிலையத்தில் அவர்களது பெற்றோர்கள், உறவினர்கள் மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Tags:    

Similar News