திருச்சியில் பெண்ணை கொலை செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருச்சி கொள்ளிடம் ஆற்றில் பெண்ணை கொலை செய்தவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Update: 2022-08-28 09:59 GMT

திருச்சி அருகே உள்ள முதுவத்தூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி கலைச்செல்வி என்கிற செல்வி (வயது37). இவர் கடந்த 11-7-22 அன்று திருச்சி கொள்ளிடம் ஆற்றில் பிணமாக கிடந்தார். ஸ்ரீரங்கம் போலீசார் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தியதில் செல்வியை லால்குடி பக்கம் உள்ள கல்லக்குடியை சேர்ந்த நாகராஜ் (வயது53) என்பவர் ஆசைக்கு இணங்க மறுத்ததால் கொலை செய்தது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து நாகராஜை ஸ்ரீரங்கம் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். நாகராஜ் தொடர்ந்து குற்ற செயல்பட கூடியவர் என்பது விசாரணையில் தெரியவந்ததால் அவரை ஒரு வருட காலம் எந்தவித விசாரணையும் இன்றி குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாகராஜனிடம் சார்வு செய்யப்பட்டது.

Tags:    

Similar News