எல்லாம் இருந்தும் என்ன செய்ய? வேதனையை கொட்டி தீர்த்த கவுன்சிலர் புஷ்பராஜ்
எல்லாம் இருந்தும் என்ன செய்ய? என வேதனையை கொட்டி தீர்த்தார் 54வது வார்டு கவுன்சிலர் புஷ்பராஜ்.;
திருச்சி மாநகராட்சியின் முதல் மாமன்ற கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் திருச்சி 54-வது வார்டு மாமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் தனது கன்னிப் பேச்சை பதிவு செய்தார்.
அவர் பேசுகையில் எனது வார்டில் தான் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,திருச்சி கி. ஆ. பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி, பிசியோதெரபி கல்லூரி, இ.எஸ். ஐ. மருத்துவமனை, மொத்த மருந்து கழகம் என முக்கியமான அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. இத்தனை அலுவலகங்கள் இருந்தாலும் எனது வார்டு இன்னும் அடிப்படை வசதிகள் இல்லாத ஒரு பகுதியாகவே உள்ளது. காரணம் அங்கு குடிசை பகுதிகள் அதிகம். தண்ணீர் பிரச்சனை உள்ளது. குடிநீருடன் சாக்கடை நீரும் கலந்து வருவதாக மக்கள் புகார் அளிக்கிறார்கள்.
ஆதலால் எனது வார்டை மேம்படுத்துவதற்கு மேயர் அவர்கள் திட்டங்களை அறிவிக்க வேண்டும். பின்தங்கிய பகுதியாக உள்ள எனது வார்டை மேம்படுத்த சிறப்பு திட்டம் தயாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.