இந்திய கம்யூனிஸ்டு கட்சி கொடி பயண குழுவினருக்கு திருச்சியில் வரவேற்பு

இந்திய கம்யூனிஸ்டு கட்சி கொடி பயண குழுவினருக்கு திருச்சியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.;

Update: 2022-08-04 16:40 GMT

இந்திய கம்யூனிஸ்டு கொடி பயண குழுவினருக்கு திருச்சியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில மாநாடு வருகிற 6ம் தேதி துவங்கி 9ம் தேதி வரை திருப்பூரில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஏற்றப்பட உள்ள கொடி மன்னார்குடியில் இருந்து திருப்பூர் நோக்கி புறப்பட்டது. கொடி பயண குழுவினருக்கு இன்று திருச்சியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த குழுவினருக்கு திருச்சி உறையூர் குறத்தெருவில் அளிக்கப்பட்ட வரவேற்பு நிகழ்ச்சிக்கு மேற்கு பகுதி செயலாளர் சுரேஷ் முத்துசாமி தலைமை தாங்கினார். மாநகர் மன்ற உறுப்பினர் சுரேஷ் சிறப்புரையாற்றினார். மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பேசினார்கள்.

Tags:    

Similar News