தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு திருச்சியில் வரவேற்பு
தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு திருச்சியில் வரவேற்பு அளிக்கப்பட்டது.;
தெலுங்கானா மாநில கவர்னராக இருப்பவர் தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன். இவர் புதுச்சேரி மாநிலத்தின் துணை நிலை ஆளுநர் ஆகவும் கூடுதல் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று காலை விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளித்தார்.
வரவேற்பு முடிந்த பின்னர் கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் கார் மூலம் தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றார். கவர்னர் வருகையையொட்டி திருச்சி விமான நிலைய பகுதி மற்றும் புதுக்கோட்டை சாலை, தஞ்சை சாலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.