திருச்சி மாவட்டத்தில் 157 பதற்றமான வாக்கு சாவடிகளில் வெப் கேமரா

திருச்சி மாவட்டத்தில் 157 பதற்றமான வாக்குசாவடிகளில் வெப் கேமரா பொருத்தப்பட்டுள்ளதாக கலெக்டர் சிவராசு தெரிவித்தார்.

Update: 2022-02-18 12:30 GMT

ஒரு வாக்குச்சாவடியில் வெப் கேமரா பொருத்தப்பட்டு உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள வாக்குசாவடிகளுக்கு, வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணி இன்று நடைபெற்றது.பொன்மலை கோட்ட அலுவலகத்தில் வாக்கு பதிவு எந்திரங்கள்அனுப்பும் பணியினை திருச்சி மாவட்டகலெக்டர் சிவராசுபார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம்  அவர் கூறும்போது திருச்சி மாவட்டத்தில்  வாக்கு சாவடிகள் 1562அமைக்கப்படஇருந்தது.இதில் 4 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் 1,558வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒருகோட்டத்திற்கு 4 வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் ஒரு வாகனத்தில் தேர்தல் அலுவலர்கள் இருப்பார்கள்.

ஒரு வாகனத்தில் வாக்குப் பதிவு எந்திரம், போலீசாரும்இருப்பார்கள்.தேர்தல் நடக்குநாளான நாளை ஒரு வாகனத்தில் கொரோனா தடுப்பு உபகரணங்கள் கொண்டு செல்லப்படும்.பயன்படுத்தப்பட்ட கொரோனா உபகரணங்கள் ஒரு வாகனத்தின் மூலம் எடுத்து சென்று அழிக்கப்படும். பயன்படுத்தாத கொரோனா உபகரணங்கள் மாவட்ட  சுகாதார அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பப்படும்.

நீதிமன்ற உத்தரவின்படிஅனைத்து வாக்கு சாவடிகளிலும் சி.சி.டி.வி. கேமரா  பொருத்தப்பட்டுஉள்ளது. திருச்சி மாவட்டத்தில் 157 வாக்குச்சாவடிகள் பதட்டமானதாக அறியப்பட்டு உள்ளது. இந்தவாக்குசாவடிகளுக்கு மைக்ரோ அப்சர்வர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மேலும் வெப் டிவி, கேமிராவும் அங்கு பொருத்தப்பட்டுஉள்ளது. வாக்குசாவடிக்குவாக்கு பதிவுஎந்திரங்கள் அனுப்பும் பணி இன்று இரவிற்குள்ளாக முடிவடையும் என்றார்.

Tags:    

Similar News