திருச்சி மாநகராட்சி பகுதி முழுவதும் நாளை மறு நாள் குடிநீர் வினியோகம் நிறுத்தம்
திருச்சி மாநகராட்சி பகுதி முழுவதும் நாளை மறுநாள் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருச்சி மாநகராட்சி பகுதியில் ஆகஸ்ட் 14ம் தேதி குடிநீர் வினியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக திருச்சி மாநகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கம்பரசம்பேட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 13.08.2024 அன்று மேற்கொள்ளப்படவுள்ளதால், குடிநீர் விநியோகம் 14.08.2024 ஒருநாள் இருக்காது.
திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை நீரேற்று நிலையம் ஆகிய நீரேற்று நிலையத்திற்கு கம்பரசம் பேட்டை (110/33-11KV) துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கம்பரசம் பேட்டை (110/33-11KV) துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணி 13.08.2024 அன்று மேற்கொள்ளப்பட உள்ளது.
இதன் காரணமாக கம்பரசம்பேட்டை தலைமை நீர்ப்பணி நிலையம், டர்பன் நீரேற்று நிலையம், பெரியார் நகர் கலெக்டர் வெல் நீரேற்று நிலையம் மற்றும் அய்யாளம்மன் படித்துறை ஆகிய நீரேற்று நிலையத்திலிருந்து மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளுக்கு வழங்கப்படும் குடிநீர் விநியோகம் 14.08.2024 ஒருநாள் மட்டும் இருக்காது.
15.08.2024 அன்று முதல் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே, பொதுமக்களுக்கு இதனால் ஏற்படும் சிரமத்தைப் பொறுத்து மாநகராட்சியுடன் ஒத்துழைக்குமாறும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.