திருச்சி காஜாமலை மெயின் ரோட்டில் 4 நாளில் ஆக்கிரமிப்பு அகற்ற கெடு

திருச்சி காஜாமலை மெயின் ரோட்டில் 4 நாளில் ஆக்கிரமிப்பு அகற்றவேண்டும் என நெடுஞ்சாலைத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.;

Update: 2022-05-31 17:01 GMT

பைல் படம்.

திருச்சி டி.வி.எஸ். டோல்கேட்டில் இருந்து காஜாமலை வழியாக முள்ளிப்பட்டி வரை சாலை அகலப்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்பட இருக்கிறது.இதனையொட்டி திருச்சி காஜாமலை மெயின் ரோட்டில் உள்ள நெடுஞ்சாலைத்துறை இடத்தை ஆக்கிரமிப்பு செய்து கடை மற்றும் வீடுகள் கட்டி இருப்பவர்கள் ஆக்கிரமிப்புகளை நான்கு நாட்களில் அகற்றிக் கொள்ள வேண்டும் இல்லை என்றால் ஆக்கிரமிப்பு அதற்கான கட்டணம் முழுவதும் அவர்களிடமே வசூல் செய்யப்படும் இது இறுதி எச்சரிக்கை என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். காஜாமலை மெயின் ரோடு ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கித் தவிப்பதால் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலைத் துறை எச்சரிக்கை விடுத்திருப்பது காஜாமலை மக்களிடம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News