திருச்சி மாவட்டத்தில் 5 நகராட்சிகளில் உள்ள வார்டு, வாக்காளர் விவரம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் எத்தனை வார்டுகள்? எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.;
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை துறையூர், துவாக்குடி, மணப்பாறை, லால்குடி, முசிறி ஆகிய 5 நகராட்சிகள் உள்ளன. இதில் துவாக்குடி நகராட்சியில் 21 வார்டுகளும், 37 வாக்குச்சாவடிகளும் இடம் பெற்றுள்ளன. இந்த நகராட்சியில் மொத்தம் 28 ஆயிரத்து 870 வாக்காளர்கள் உள்ளனர். மணப்பாறை நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகளும், 44 வாக்குச்சாவடிகளும் உள்ளன. இதில் 34 ஆயிரத்து 683 வாக்காளர்களாக இடம் பெற்றுள்ளனர்.
துறையூர் நகராட்சியில் மொத்தம் 24 வார்டுகளில், 35 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 27 ஆயிரத்து 881 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். லால்குடி நகராட்சியில் 24 வார்டுகளும், 24 வாக்குச்சாவடிகளும் இடம் பெற்றுள்ளது. இதில் 20 ஆயிரத்து 328 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளார். முசிறி நகராட்சியில் 24 வார்டுகளும், 33 வாக்குச்சாவடிகளும், 27 ஆயிரத்து 023 வாக்காளர்களும் உள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் மிகவும் குறைவான வாக்குகள் உள்ள நகராட்சி லால்குடியும், அதிகபட்சமாக மணப்பாறையில் 27 வார்டுகளும், 44 வாக்குச்சாவடிகளும், 34 ஆயிரத்து 683 வாக்காளர்களும் உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது.