திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபயணம்
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நடைபயணம்மேற் கொள்ளப்பட்டது.;
திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நடைபயணம் மேற்கொண்டனர்.
பி.ஜே.பி.யை அகற்றுவோம் இந்திய நாட்டை காப்போம் என்ற கோஷத்தை முன்வைத்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சியில் பகுதி வாரியாக நடைபயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடைபயண நிகழ்ச்சியை கடந்த வாரம் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து பகுதி வாரியாக இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நடைபயணம் நடத்தி வருகிறார்கள்.
அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்டத்தில் கிழக்கு பகுதி குழு சார்பில் சிந்தாமணி அண்ணாசிலையில் இருந்து நடைபயணம் புறப்பட்டது. பகுதி செயலாளர் சையது அபுதாஹீர் தலைமையில் இந்த நடைபயணம் நடைபெற்றது.
ஏ.ஐ.டி.யு.சி. மாவட்டசெயலாளர், 23வது வார்டு மாமன்ற உறுப்பினர், சுரேஷ் நடை பயணத்தை துவக்கி வைத்து பேசினார்கள், சிந்தாமணி கடைவீதி, பெரியசாமி டவர், காளியம்மன் கோயில்தெரு, நந்தி கோயில்தெரு, என்.எஸ்.பி ரோடு, தேரடி பஜார்.உள்ள பகுதி முழுவதும் நடைபயண இயக்கம் நடைபெற்றது.
துணை செயலாளர் கே.கே.முருகேசன் ஏ.ஐ.டி.யு.சி.தரைக்கடை சங்கமாவட்ட செயலாளர் A.அன்சர் தீன் மற்றும் பகுதி நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொண்டார்கள் . முடிவில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவா முடித்து வைத்து உரையாற்றினார்.