திருச்சியில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையில் கலெக்டர் ஆய்வு

திருச்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆய்வு செய்தார்.;

Update: 2022-01-05 16:12 GMT

திருச்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை இன்று மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆய்வு செய்தார்.

திருச்சி மாவட்ட பழைய கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சட்டமன்ற தேர்தலில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்  பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி இந்த இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பானதாக உள்ளனவா? என திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு இன்று ஆய்வு செய்தார். அப்போது அனைத்து கட்சி பிரதிநிதிகள், கோட்டாட்சியர் சிந்துஜா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News