திருச்சியில் அரசு பேருந்தில் வ.உ.சி.புகைப்பட கண்காட்சி துவக்கம்

திருச்சியில் குளிரூட்டப்பட்ட அரசு பஸ்சில் வ.உ.சி.புகைப்பட கண்காட்சியை கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்தார்.;

Update: 2022-03-07 14:30 GMT

திருச்சியில் அரசு பஸ்சில் வஉசி புகைப்பட கண்காட்சியை கலெக்டர் சிவராசு தொடங்கி வைத்தார்.

திருச்சி ஜான்வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் வாழ்க்கை வரலாறு குறித்த குளிரூட்டப்பட்ட அரசுப் பேருந்தில் வடிவமைக்கப்பட்ட புகைப்படக் கண்காட்சியினைப் பார்வையிட்டு தொடங்கி வைத்தார்.

திருச்சி மாவட்டத்தில் இந்த புகைப்படக் கண்காட்சி இன்று முதல் வருகிற 12-ந் தேதி வரை 6 நாட்கள் பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியின் போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, செய்தி மக்கள் தொடர்புத் துறை உதவி இயக்குனர் செந்தில்குமார், பள்ளித் தலைமையாசிரியர் சைமன் சுகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News