ஆ.ராசாவை கண்டித்து திருச்சியில் வ.உ.சி. பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்
ஆ.ராசாவை கண்டித்து திருச்சியில் வ.உ.சி. பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்சியில் ஆ ராசா எம்.பி அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி வஉசி பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திமுக துணை பொதுச்செயலாளர் ராசா எம்பி வஉ சிதம்பரனார் பற்றி அவதூறாக பேசியதை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய வ உ சி பேரவையின் சார்பில் ஆ ராசா எம்.பி.யின் அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி திருச்சி அண்ணா சிலை அருகில் மாநில தலைவர் லட்சுமணன் பிள்ளை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டதிற்கு மாவட்டச் செயலாளர் வி சிவகுமார் முன்னிலை வகித்தார்.
இதில் பொருளாளர் ஆனந்தகுமார் அமைப்புச் செயலாளர்பிரகாஷ் , துணைச் செயலாளர் ஆர். வி .உதயகுமார், மாவட்ட துணைச் செயலாளர் டி .ஜி. கணேசன் மூர்த்தி, என். எஸ். வாசுதேவன், எஸ். மகேஸ்வரன், டோல்கேட் ரெமோ கார்த்திக், சமயபுரம் ஆறுமுகம், துடையூர் எம். கோபி,. மண்ணை பார்த்திபன் ,சமயபுரம் ஐயப்பன், மற்றும் எஸ்.மகேஸ்வரன், வி. கே எஸ் மணிகண்டன் குமார் எஸ் குமார் ராஜகணபதி, கார்த்திக், மீன் சீனி, புறநகர் மாவட்ட தலைவர் எம் சந்திரசேகர், பி .அருண் பிரசாத், மணிகண்டன் ,டைகர் முருகன் ,எல். பொன்னுசாமி, முருகன், செந்தில் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு ஆ.ராசாவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.