திருச்சியில் கிராம சுகாதார செவிலியர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பாக திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.;

Update: 2021-11-19 12:37 GMT

திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே கிராம சுகாதார  செவிலியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு அரசு கிராம சுகாதார செவிலியர் கூட்டமைப்பு சார்பாக இன்று திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் காயத்ரி தேவி தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கோமதி முன்னிலை வகித்தார்.

முழு வீரிய தன்மையுடன் பொதுமக்களுக்கு ஒரு நாள் தடுப்பூசி மருந்து கிடைத்திடும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும். முழு வீரியத்தன்மையுடன் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்புசி கிடைத்திடும் வகையிலும், மருத்துவ வழிகாட்டலுக்கு மாறாக வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயித்ததை கைவிட வேண்டும்.

தாய் சேய் நலப்பணி பாதிக்காத வகையில் சனிக்கிழமையில் மட்டும் காலை 9 மணி முதல் மாலை 5 வரை இருக்க வேண்டும். விடுப்பட்டுள்ள கிராம, பகுதி, சமுதாய சுகாதாரசெவிலியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கிட வேண்டும். துணை சுகாதார நிலையங்களில் செவிலியர்களை நியமனம் செய்யும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தின் போது சுமார் 200 - க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News