திருச்சி மாவட்டத்தில் மே 1ம் தேதி கிராம சபை கூட்டம்: ஆட்சியர் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளில் மே 1ம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.;

Update: 2023-04-28 17:29 GMT

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.

தொழிலாளர் தினமான 01.05.2023 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், தொழிலாளர் தினமான 01.05.2023 அன்று நடைபெறவுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப்குமார் தெரிவித்துள்ளதாவது :-

திருச்சிராப்பள்ளி மாவட்டம் சார்ந்த அனைத்து கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொதுநிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை கிராம சபையின் பாh;வைக்கு வைத்து ஒப்புதல் பெறுதல், சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது குறித்து விவாதித்தல், 2021-22 மற்றும் 2022-23 ஆம் ஆண்டிற்கான அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்2-ன் கீழ் ஊராட்சிகளில் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்ற விபரம், 2023-24ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம்2-ன் கீழ் ஊராட்சிகளில் தேர்வு செய்யப்பட்ட பணிகள் விபரம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்ட புதுப்பிக்கப்பட்ட நூலகங்களில் ‘வாசகர்கள் குழு” உருவாக்குவது குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 2022-23ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதித்தல் 2023-24ஆம் ஆண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட பணிகள் மற்றும் வேலை வழங்குவதற்கான தொழிலாளர் பட்ஜெட் இறுதி செய்தல், பிரதம மந்திரி ஊரக உறுதி திட்டத்தின் கீழ் வீடு கட்டுவது தொடர்பாக விவாதித்தல், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, பிரதம மந்திரி கிராம சாலை திட்டம், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டத்தின் கீழ் கழிவறைகள் கட்டுதல், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள், நெகிழிக்கு மாற்றுப்பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவித்தல், ‘எங்கள் கிராமம்! எழில் மிகு கிராமம்!! உறுதி மொழி எடுத்தல், ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் ஊராட்சியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீதம் குடிநீர் வழங்கப்பட்ட ஊராட்சி என தீர்மானம் நிறைவேற்றுதல், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் கிராமப்புற இளைஞர்களுக்கான திறன் வளர்பயிற்சி திட்டம், ஒருங்கிணைந்த வேளாண் வளா;ச்சி திட்டத்தின் கீழ் பண்ணை சார் வாழ்வாதார திட்டம்  சாரா வாழ்வாதார திட்டம், 2022-23ஆம் நிதியாண்டில் மண்ணச்சநல்லூர் ஊராட்சி ஒன்றியம், கொணலை ஊராட்சியில் மகாகவி பாரதியார் வாழ்வாதார பூங்கா அமைத்தல் போன்றவற்றை கிராம சபையில் விவாதிக்கப்படும் எனத்தெரிவிக்கப்படுகிறது.

தொழிலாளர் தினமான 01.05.2023 அன்று காலை 11.00 மணிக்கு திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கிராம சபைக்கூட்டத்தில் அனைத்து வாக்காளர் பெருமக்களும் கலந்து கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News