திருச்சியில் கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க பொதுக்குழு கூட்டம்

திருச்சியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

Update: 2024-01-28 16:56 GMT
திருச்சியில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.

திருச்சியில் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற  சங்கத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் மாநிலத் தலைவர் அழகிரிசாமி தலைமையில் நடந்தது.மாநில துணைத் தலைவர் குபேந்திரன், மாநில பிரசாரச் செயலர் பொய்யாமொழி, மாநிலச் செயலாளர் வாசுதேவன், மாவட்டத் தலைவர் ஜம்புநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட செயலாளர் பிரபு வரவேற்றார். மாநிலப் பொதுச் செயலாளர் மோகனரங்கன், துணைத் தலைவர் செந்தில் நாதன், தலைமைநிலையச் செயலாளர் செந் தில்குமார் ஆகியோர் சங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர்.

கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சங்க பொதுக் குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

கூட்டத்தில் வறட்சி, மழை, வெள்ளம் உள்ளிட்ட தருணங்களில் கணினி மூலம் பயிர்களை ஆய்வு செய்வதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தீர்க்க வேண்டும், ஒருங்கிணைந்த பதவி உயர்வு வழங்கும் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். கல்வித்தகுதிக்கேற்ப கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும். புயல், வெள்ளம், இயற்கை சீற்றம், மழை வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலப்பணிகளுக்கு சிறப்பு ஊதியம் வழங்குவதுடன், பயணப்படியை இரட்டிப்பாக்க வேண்டும். தேர்தல் பணிகளில் ஈடுபடும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை மதிப்பூதியமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

Similar News