தமிழ்ப்புத்தாண்டை மாற்றக்கூடாது: ஸ்ரீரங்கத்தில் விஎச்பி வேல் யாத்திரை

தமிழ்ப்புத்தாண்டை மாற்றக்கூடாது என்று வலியுறுத்தி, ஸ்ரீரங்கத்தில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் வேல்யாத்திரை தொடங்கியுள்ளது.;

Update: 2022-01-07 23:30 GMT

தமிழரின் புத்தாண்டு நாள், சித்திரை முதல் தேதிதான், அதை மாற்றக்கூடாது என்பதை வலியுறுத்தி, தமிழ்க் கடவுளான முருகப்பெருமானிடம் பிரார்த்தனை செய்து, திருச்சியில்   விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பு செயலாளர் சேதுராமன்  தலைமையில்,  மாநில அரசை வலியுறுத்தி நேற்று ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் வேல்யாத்திரை துவங்கியது. இது,  பழனியில் முடிகிறது.

இந்த யாத்திரை துவக்க நிகழ்வில், விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில 'கோ' பிரமுக் சசிக்குமார், மாவட்டத் தலைவர் முருகேசன், பாஜக மாவட்டத் தலைவர் ராஜசேகர், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டச் செயலாளர்  சீனிவாசன், மாவட்ட பொருளாளர் சிவராஜ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News