திருச்சியில் கறவை மாடு வளர்க்க பயிற்சி-கால்நடை பல்கலைக்கழகம் அறிவிப்பு
திருச்சியில் கறவை மாடு வளர்க்க பயிற்சி அளிக்கப்படும் என தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.;
திருச்சி அகில இந்திய வானொலி நிலையம், திருச்சி கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் வானொலி பண்ணைப்பள்ளி, அறிவியல் ரீதியிலான கறவை மாடு வளர்ப்பு என்ற தலைப்பில் ஜனவரி 5-ஆம்தேதி முதல் மார்ச் 30-ஆம்தேதி வரை புதன்கிழமை தோறும் வானொலியில் ஒலிபரப்பாக உள்ளது.
இதில், தரமான கறவை மாடுகளை தேர்ந்தெடுக்கும் முறைகள், முறையான பராமரிப்பு செயற்கை முறை கருவூட்டல், கன்று பராமரிப்பு உள்ளிட்ட ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் அளிக்கப்படும்.
ஒலிபரப்புத் தொடர் முடிந்த உடன் இம்மையத்தில் ஒரு நாள் நேர்முக வகுப்பு நடை பெறும். இதில், சந்தேகங்களுக்கு வல்லுனர்கள் மூலம் நேரடியாக விளக்கங்கள் அளிக்கப்படுவதோடு, சான்றிதழும் வழங்கப்படும். இப்பயிற்சியில் சேர விரும்புவோர் நேரடியாகவோ, மணியார்டர் மூலமாகவோ ரூ.100 கட்டணம் செலுத்தி பெயரை முழு முகவரி மற்றும் செல்போன் எண்ணுடன் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 0431-2331715 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை, கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மைய தலைவர் ஷிபி தாமஸ் தெரிவித்துள்ளார்.