திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 16 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று நடைபெற்றது.

Update: 2022-07-06 12:09 GMT

திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது.

திருச்சி உறையூரில் வானத்தையே கூரையாக கொண்டு அருள் பாலித்து வருகிறார். காற்று , வெயில் மழை என அனைத்து இயற்கை சீற்றங்களையும் தன் தலையில் தாங்கி கொண்டு மக்களை காக்கும் வெக்காளியம்மன் சோழமன்னர்களால் குலதெய்வமாக வழிபாடு செய்யப்பட்டவர் மட்டும் அல்ல. இன்று திருச்சி மாநகர மக்களின் காவல் தெய்வமாகவும் விளங்கி வருகிறார்.

இத்தகைய சிறப்புக்குரிய வெக்காளியம்மன் கோவிலில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று காலை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இவ்விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கேஎன்நேரு, திருச்சிமாவட்ட கலெக்டர் பிரதீப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் வைத்திநாதன் உள்பட முக்கிய பிரமுகர்களும் விழாவில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News