வந்தாச்சு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்...கால அட்டவணை வெளியீடு
வந்தாச்சு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்... வேட்புமனு தாக்கல் பற்றிய கால அட்டவணை பட்டியில் வெளியிடப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை மாநில தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டது. இதன்படி தமிழகத்தில் உள்ள பேரூராட்சி, நகராட்சிகள், மாநகராட்சிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 19ம் தேதி நடைபெற உள்ளது.
வேட்பு மனு தாக்கல், இறுதி நாள், மனுக்கள் பரிசீலனை, வாபஸ் வாங்குதல், வாக்குப்பதிவு வாக்கு எண்ணிக்கை பற்றிய கால அட்டவணை பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது.