திருச்சி பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத முதியவர் சடலம் மீட்பு
திருச்சி, மன்னார்புரம் தற்காலிக பஸ் நிலையத்தில், அடையாளம் தெரியாத முதியவர் சடலத்தை மீட்ட போலீசார், அதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.;
தீபாவளி பண்டியையை முன்னிட்டு, திருச்சி மன்னார்புரத்தில் தற்காலிக பஸ் நிலையம் இயங்கி வருகிறது. இந்த தற்காலிக பஸ் நிலையம், வருகிற ஞாயிற்றுக்கிழமை 7-ந்தேதி வரை செயல்படும். அங்கிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு, பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அந்த பஸ் நிலையம் அருகே சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று கிடந்தது. இது குறித்து, திருச்சி கல்லுக்குழி வி.ஏ.ஓ, செந்தில்குமார் கொடுத்த புகாரின் பேரில், கே.கே.நகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமார் மற்றும் போலீசார், முதியவர் சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில், அவர் அப்பகுதியில் தங்கியிருந்து பிச்சை எடுத்து வந்தது தெரியவந்தது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.