மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு சீருடை
பொங்கல் பண்டிகையையொட்டி திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் அர்ச்சகர்கள், பணியாளர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.;
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளபடி இந்து சமய அறநிலையத் துறை சார்பில் திருச்சி மலைக்கோட்டை தாயுமானவ சுவாமி கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கு திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் இனிகோ இருதயராஜ் சீருடை வழங்கி பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்தார்.
முன்னதாக மாணிக்க விநாயகர் சன்னதியில் சாமி தரிசனம் செய்து கோயில் சார்பில் வழங்கிய மரியாதையை இனியோக இருதய ராஜ் ஏற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணன், கோவில் உதவி ஆணையர் விஜயராணி, கண்காணிப்பாளர்பிரகாஷ், சரக ஆய்வாளர் விஜயபூபதி, நிர்வாக ஆய்வாளர் பத்மாவதி மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.