திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

திருச்சி அரசு மருத்துவ மனை வளாகத்தில் கிடந்த அடையாளம் தெரியாத ஆண் பிணத்தை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.;

Update: 2021-12-07 10:40 GMT
திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்

திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையம் (பைல் படம்)

  • whatsapp icon

திருச்சி புத்தூரில் உள்ள அரசு மருத்துவ மனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். இந்நிலையில் அங்குள்ள டீக்கடை அருகே சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம் ஒன்று கிடந்தது. இது குறித்து பணியில் இருந்த உதவி டாக்டர் தினேஷ் என்பவர் அரசு மருத்துவமனை போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்தவர் அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? எப்படி இறந்தார்? என்ன காரணம்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News