திருச்சியில் கொலை வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சியில் கொலை வழக்கில் கைதான இருவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.;
திருச்சி பொன்மலை சோமசுந்தரம் நகர் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஒரு கொலை வழக்கில் பொன்மலைப்பகுதியை சேர்ந்த ஹேமச்சந்திரன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். ஹேச்சந்திரன் மீது காந்தி மார்க்கெட் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஏற்கனவே ஒரு கொலை வழக்கில் குற்றவாளி என்பது தெரிய வந்தது. மேலும் சதீஷ்குமார் மீதும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆதலால் அவர்கள் இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். இந்த உத்தரவின் நகல் திருச்சி மத்திய சிறையில் உள்ள அவர்கள் இருவரிடமும் இன்று சார்வு செய்யப்பட்டது.