திருச்சி கே.கே.நகரில் வீடு முன் மேய்ந்த ஆடுகளை திருடிய இருவர் கைது

திருச்சி கே.கே.நகரில் வீட்டு முன் மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளை திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-01-23 14:26 GMT

திருச்சி கே.கே.நகர் உடையான்பட்டியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 35). இவர் தனது வீட்டின் முன்பாக ஆடுகளை மேயவிட்டு இருந்துள்ளார். அப்போது இரண்டு பேர் வந்து ஒரு ஆட்டை திருடிச்செல்ல முற்பட்டு உள்ளனர். இதனை கண்ட சுரேஷ் மற்றும் அக்கம்பக்கத்தினர் அவர்களை கையும் களவுமாக மடக்கி பிடித்துள்ளனர்.

இது குறித்து கே.கே.நகர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் அவர்களை பிடித்து நடத்திய விசாரணையில், ஏர்போர்ட் வள்ளுவர் தெருவை சேர்ந்த சையது முகமது (வயது33), மணிகண்டம் கீழ தெருவை சேர்ந்த வெள்ளைசாமி (வயது 22) என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் மீது சுரேஷ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Tags:    

Similar News