ஸ்ரீரங்கம் திமுக பெண் கவுன்சிலர் மகனை தாக்கிய இருவர் கைது
தேர்தல் முன் விரோதத்தில் வெற்றி பெற்ற திமுக பெண் கவுன்சிலர் மகனை தாக்கிய இருவரை போலீசார் கைது செய்தனர்.;
திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்டத்திற்கு உட்பட்ட 15-வது வார்டில் கீழதேவதானத்தை சேர்ந்த தசரதன் (எ) தசரத ராஜ் என்பவரது மனைவி தங்கலட்சுமி என்பவர் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
இந்நிலையில் இந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சம்பந்தமாக ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற அன்று இரவு தசரதராஜின் மகன் வீட்டிற்கு ஹரிஹரகுமார் (வயது 27) என்பவரை வழிமறித்து தகாத வார்த்தைகளால் திட்டி கையால் அடித்ததாக ஹரிஹரகுமார் கோட்டை போலீசில் புகார் கொடுத்தார்.
புகாரின்பேரில் கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த பிரசாத் (வயது 24), சுதர்சன் (வயது 24) என்ற இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.