டி.டி.வி. தினகரன் உட்பட 1,200 பேர் மீது திருச்சியில் போலீசார் வழக்கு
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் உட்பட 1200 பேர் மீது திருச்சியில் வழக்குபதிவு செய்துள்ளனர்.
அரசியலமைப்பு சட்டத்தை மீறி மேகதாதுவில் அணை கட்ட நிதி ஒதுக்கி இருக்கும் கர்நாடக அரசை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் அதனை தடுத்து நிறுத்த கோரியும் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே இன்று அ.ம.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு, அ.ம.மு.க. மாநில பொருளாளர் திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் மனோகரன், புறநகர் மாவட்ட செயலாளர் ராஜசேகரன், அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர். பாண்டியன் உள்ளிட்ட 375 பெண்கள் உட்பட 1200 பேர் மீது கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.