திருச்சியில் பிரதேச ராணுவ படை ஓய்வூதியர்கள் நலச்சங்க ஆண்டு விழா
திருச்சியில் பிரதேச ராணுவ படை ஓய்வூதியர்கள் நலச்சங்க ஆண்டு விழா நடைபெற்றது.
திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் 117 பிரதேச ராணுவ படை முகாம் அலுவலகம் உள்ளது. இந்த பிரதேச ராணுவ படையில் பணியாற்றிய ராணுவ அதிகாரிகள் மற்றும் ராணுவ வீரர்கள் கார்கில் போர் உள்பட பல போர்களில் பங்கேற்று வெற்றியுன் திரும்பி உள்ளனர். மேலும் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பணிகளுக்கும் பல முறை சென்று வந்துள்ளனர்.
திருச்சியில் கடந்த 1977 மற்றும் 1999 ,2005ம் ஆண்டுகளில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தின் போது தண்ணீரால் சூழப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் மக்களை மீட்கும்பணியிலும் சிறப்பாக செயல்பட்டனர். 1977ம் ஆண்டு எம்ஜிஆர் தமிழக முதல்வராக இருந்த போது ஏற்பட்ட வெள்ளத்தின்போது சிறப்பாக செய்த சேவைக்காக எம்ஜிஆர் பிரதேச ராணுவ படைவீரர்களை பாராட்டி பாராட்டு சான்றிதழ் அளித்தார்.
இந்த பிரதேச ராணுவ படையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் பிரதேச ராணுவ படை ஓய்வூதியர்கள் நலசங்கம் என ஒரு அமைப்பை ஏற்படுத்தி செயல்பட்டு வருகிறார்கள்.
இந்த சங்கத்தின் ஆறாவது ஆண்டு விழா திருச்சி ஜான் வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. சங்க தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். செயலாளர் குமார், பொருளாளர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
இந்த விழாவில் ஓய்வு பெற்ற ராணு கேப்டன் அருள் ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். விழாவில் சங்க உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். விழாவில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.