திருச்சி மாநகராட்சி 11-வது வார்டு அ.தி.மு.க.வேட்பாளர் வனிதா வேட்பு மனு
திருச்சி மாநகராட்சி 11-வது வார்டு அ.தி.மு.க.வேட்பாளர் வனிதா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.;
திருச்சி மாநகராட்சி 11வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் ஆர். வனிதா இன்று தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
திருச்சி மாநகராட்சி 11வது வார்டு அ.தி.மு.க. வேட்பாளர் ஆர். வனிதா இன்று தனது வேட்பு மனுவை மாநகராட்சி கோ. அபிஷேகபுரம் கோட்ட அலுவலகத்தில் கோட்ட உதவி ஆணையரிடம் தாக்கல் செய்தார். அவருடன் கட்சி நிர்வாகிகள் பலர் சென்று இருந்தனர்.
ஆர். வனிதா தற்போது திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. துணை செயலாளர் இருந்து வருகிறார்.இவர் ஏற்கனவே இதே வார்டில் இரண்டு முறை மாமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்கள் பணியாற்றி உள்ளார். கடந்த 2011 தேர்தலில் தமிழகத்திலேயே மாமன்ற உறுப்பினர்களில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு.