திருச்சி மேற்கு பகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கூட்டம்
திருச்சி மேற்கு பகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மேற்கு பகுதி குழு கூட்டம் 23 வது வார்டில் பகுதி குழு உறுப்பினர் சத்யா தலைமையில் நடைபெற்றது. மாமன்ற உறுப்பினர் க. சுரேஷ் அரசியல் விளக்க உரையாற்றினார். பகுதி செயலாளர் சுரேஷ் முத்துசாமி துணைச் செயலாளர்கள் இப்ராஹிம், முருகன், பொருளாளர் ரவீந்திரன், பகுதி குழு உறுப்பினர்கள் வை. புஷ்பம், ஆனந்தன், நாகராஜன், சூர்யா ராமச்சந்திரன், குண சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. மத்திய அரசின் பெட்ரோலிய பொருட்கள் விலை உயர்வை கண்டித்தும், ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையினை கண்டித்தும் ஆகஸ்ட் 30 மாநிலம் தழுவிய மறியல் போராட்டத்தினையொட்டி திருச்சி தெப்பக்குளம் தபால் நிலையம் முன்பாக நடைபெறும் போராட்டத்தில் மேற்குப் பகுதியினர் பெரும் திரளாக பங்கேற்பது.
2. உறையூர் பகுதியில் பொதுமக்கள் மற்றும் கல்வி நிலையம் கோவில் தலங்கள் அருகில் உள்ள கடைவீதி பேருந்து நிறுத்தம் அருகில் மூன்று டாஸ்மாக் கடைகள் இருப்பதால் பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்பட்டு குடிபோதையில் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு கொலை வரை சென்று ஒருவர் உயிரிழந்த நிலையில் ஆகஸ்ட் 10ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மனு கொடுத்துள்ளது. பல்வேறு அமைப்புகளும் டாஸ்மார்க் கடைகளை மூட வேண்டும் என்று குரல் கொடுத்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகமும் கலால் துறையும் உறையூர் பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மார்க் கடைகளை மூட வேண்டும் என்று இக்கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.