திருச்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு
திருச்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை அமைச்சர் கே.என். நேரு ஆய்வு செய்தார்.;
திருச்சி செல்வநகர் பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை அமைச்சர் நேரு ஆய்வு செய்தார்.
திருச்சி மாநகராட்சி 55 -ஆவது வார்டு செல்வநகர் மற்றும் கருமண்டபம் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது. அங்குள்ள டவர் ரோடு பகுதியில் நடந்துவரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது அதிகாரிகளிடம் இந்த பணிகளை விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது மாநகராட்சி மேயர் அன்பழகன், ஆணையர் முஜிபுர் ரகுமான் , நகர பொறியாளர் அமுதவல்லி, நிர்வாக பொறியாளர் சிவபாதம் மற்றும் அதிகாரிகள், பகுதி செயலாளர் மோகன்தாஸ், மாமன்ற உறுப்பினர் ராமதாஸ் உள்பட கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள் சென்றிருந்தனர்.