திருச்சி மாநகராட்சி சார்பில் நாளை 250 இடங்களில் கொரோனா தடுப்பூசி

திருச்சி நகரில் நாளை மாநகராட்சி சார்பில் 250 இடங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-10-29 16:15 GMT

கொரோனாவை அடியோடு ஒழிப்பதற்காக தமிழக அரசு சார்பில் சனிக்கிழமை தோறும் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் திருச்சி மாநகராட்சி சார்பில் நாளை (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 7 மணி  வரை 250 இடங்களில் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது. கோட்டம் வாரியாக, வார்டு வாரியாக இந்த முகாம்கள் நடைபெற இருப்பதால் பொதுமக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு பயன் அடையுமாறு ஆணையர் முஜிபுர் ரகுமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News