திருச்சி: கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திருநாவுக்கரசர் எம்பி பிரச்சாரம்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக வேட்பாளர்களை ஆதரித்து திருநாவுக்கரசர் எம்.பி, பிரச்சாரம் மேற்கொண்டார்.;
திருச்சி ஸ்ரீரங்கத்தில் திமுக, காங்கிரஸ், மதிமுக வேட்பாளர்களை ஆதரித்து திருநாவுக்கரசர் எம்.பி, பிரச்சாரம் மேற்கொண்டார்.
பின்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்தியாவில் ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என்பதை எந்த காலத்திலும் நடைமுறைப்படுத்த முடியாது. அதற்கான சாத்தியக்கூறுகள் இந்தியாவில் இல்லை.
தி.மு.க ஆட்சி பொறுப்பேற்று ஏழு மாதங்கள் தான் ஆகிறது. இதற்கிடையில் தமிழக சட்டமன்றத்தை முடக்குவோம் என எடப்பாடி பழனிச்சாமி பேசுவது முடக்குவாத பேச்சு. இத்தகைய பேச்சுகள் எல்லாம் சர்வாதிகார மனப்பான்மையோடு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையில்லாதவர்கள் பேசுவது என்று கூறினார்.