திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.;

Update: 2024-09-16 11:15 GMT

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் முத்தரசநல்லூரில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தி.மு.க. நிறுவன தலைவர்களில் ஒருவரும், மறைந்த தமிழக முதல்வருமான அண்ணாவின் 116 வது பிறந்தநாள் விழா தமிழக முழுவதும் திமுக மற்றும் அதிமுக கட்சிகள் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் காலையில் தொடங்கி மாலை வரை அண்ணா பிறந்த நாளையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானங்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

திருச்சி அல்லித்துறை, முசிறி, துறையூர் ஆகிய இடங்களில் உள்ள அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.


இறுதியாக ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட முத்தரசநல்லூர் கடை வீதியில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த  கூட்டத்திற்கு அந்தநல்லூர் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ராஜகோபால் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்  பரஞ்சோதி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

மற்றும் கழக அமைப்புச் செயலாளர்கள் முன்னாள் அமைச்சர் வளர்மதி, முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், மருதராஜ், எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் செல்வராஜ், சிறுபான்மையினர் பிரிவு  மாவட்ட செயலாளர் புல்லட் ஜான் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.

Tags:    

Similar News