திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டம்

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டத்தில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Update: 2021-12-18 11:30 GMT

திருச்சியில் நடைபெற்ற வடக்கு மாவட்ட அதிமுக ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள்.

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்ஜோதி தலைமையில் உட்கட்சி தேர்தலுக்கான ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகளுக்கு உட்கட்சி தேர்தலுக்கான ஆலோசனைகள் வழங்கினார். அவைத்தலைவர் பிரின்ஸ் தங்கவேல் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர், முன்னாள் அமைச்சர்கள் சிவபதி, அமைப்பு செயலாளர் வளர்மதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வராசு,  இந்திராகாந்தி, பரமேஸ்வரி முருகன்,  இளைஞரணி மாநில இணை செயலாளர் பொன் செல்வராஜ், சமயபுரம் சின்னையன், சேவியர், மாவட்ட கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், ரமேஷ் மற்றும் ஶ்ரீரங்கம் ரவிசங்கர், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், ஒன்றிய, நகர, பேரூராட்சி கழக செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News