திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது.
நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதையொட்டி அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தலுக்கான வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டார்கள். ஒரு புறம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே இன்னொரு புறம் கட்சியை பலப்படுத்தும் பணிகளையும் செய்து வருகிறார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க்கட்சியான அதிமுகவும் போட்டி போட்டுக்கொண்டு பூத் கமிட்டி அமைப்பது உள்ளிட்ட பணிகளை இப்போதே தொடங்கி விட்டனர்.
அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முன்னாள் முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூராட்சி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சோமரசம்பேட்டை, ஜோதி விலாஸ் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
பூத் கமிட்டி மாவட்ட பொறுப்பாளர் தாடி ம.ராசு (கழக அண்ணா தொழிற்சங்க பேரவை தலைவர்), திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் அமைச்சர் மு.பரஞ்ஜோதி கலந்து கொண்டு நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் வளர்மதி, கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், மாவட்ட கழக அவைத் தலைவர் பிரின்ஸ் தங்கவேல், கழக எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் பொன்.செல்வராஜ் மற்றும் ஒன்றிய, நகர, பகுதி, பேரூராட்சி கழக செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் மற்றும் பூத் கமிட்டி நிர்வாகிகள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டினை ஒன்றிய கழக செயலாளர்கள் எல்.ஜெயக்குமார், அ.நடராஜன், முத்துக்கருப்பன், கடிகை ம.ராஜகோபால், செல்வராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.