திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது.;
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி பேசினார்.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி தலைமையில் நடைபெற்றது.
திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று தில்லைநகரில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பரஞ்ஜோதி தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளராக கழக பொதுச்செயலாளர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியால் அறிவிக்கப்பட்ட தென்னரசு வெற்றிக்கு வடக்கு மாவட்ட கழகம் சார்பில் தேர்தல் பணியாற்றுவது,
தமிழக மக்களுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்து தியாகம் செய்த மறைந்த பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 75வது பிறந்த நாள் விழாவை வருகிற 24ம் தேதி மாவட்டம் முழுவதும் சிறப்பாக கொண்டாடுவது.
கழக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதாவின் கழக அரசு அமைய அனைத்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் அயராது பாடுபடுவது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் பிரின்ஸ் தங்கவேல், முன்னாள் அமைச்சர்கள் அண்ணாவி, பூனாட்சி, வளர்மதி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் இந்திரா காந்தி, பரமேஸ்வரி முருகன், மல்லிகா சின்னசாமி, மாவட்ட பொருளாளர் சேவியர், அ.தி.மு.க. எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாநில இணை செயலாளர் பொன் செல்வராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் சுப்பு என்கிற பே. சுப்பிரமணியன், மாணவர் அணி செயலாளர் அறிவழகன் விஜய், சிறுபான்மையினர் பிரிவு மாவட்ட செயலாளர் புல்லட் ஜான், மற்றும் ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் கலந்து கொண்டனர்.